Thursday, June 17, 2010

மனத்தூய்மை

உன் மனம் தூய்மையானது! இதை நீ உணர்ந்தால். அது உன்னை மட்டுமல்ல, உன் சுற்றத்தையும் மிக தூய்மையாக வைத்திருக்கும்!
என்னென்றால் உன் மனமானது நீ சொல்வதை மட்டுமே கேட்கும்.

கட்டுப்பாடு

நீ உன்னில் கட்டுப்படுத்த நினைக்கும் ஒவ்வொரு செயலும்,
உன்னுள்ளே அது ஒரு முழுமையை ஏற்படுத்துவதாக அமையும்.

Friday, June 11, 2010

வலிமை!

வலிமையான வார்த்தைக்கு கூட நாக்கை வளைக்க வேண்டிஇருகிறது.
அப்படி இருக்கையில், நமது வாழ்வை வலிமையாக்க நம்மை நாமே வளைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை.
- ம.கபிலன்

தேடல்!

ஞாபக மறதி கூட ஒருவகை தியானம் போன்றது தான்!
ஏனென்றால் அதிலும் ஒரு வகை தேடல் இருக்கிறது!
-ம.கபிலன்

மதிப்பு!

களவாடுவதைக் கூட கற்றுக்கொள்!
அப்பொழுதுதான் தொலைக்கப்பட்டதன் மதிப்பும்
அதன் வலியும்! உனக்கு புரியும்.
-ம.கபிலன்

கருவறை

என் தாயின் கருவறையில் நான் தந்த வலியை,
என்னவள் அழகாக என் இதயத்தில் தந்து விட்டால்,
காதல் என்ற பெயரில்!
-ம.கபிலன்